ஓராண்டிலே விவாகரத்து பெற்ற விஜய் பட நடிகை மோனிகா?.. ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய தற்போதைய நிலை..

Report
1774Shares

பாலிவுட் சினிமாவில் சிறுவயதிலே சினிமாவிற்கு நடிகையாக பலர் அறிமுகமாகி வருகிறார்கள். அதேவேகத்தில் படவாய்ப்புகள் கிடைக்காமல் காணாமல் போய்விடுகிறார்கள். அந்தவகையில் பாலிவுட்டில் 1999ல் வெளியான காலியா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மோனிகா காஸ்ட்லினோ.

இதையடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் விஜய், ரம்பா, குஷ்பு நடிப்பில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படம்தான் மின்சார கண்ணா. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார் மோனிகா. மிகப்பெரிய வெற்றி பெற்றதால் பெரியளவில் பேசப்பட்டார்.

ஆனால் இப்படத்தின் மூலம் படவாய்ப்புகள் கிடைக்காமல் திருமணத்திற்கு தயாராகினார். கடந்த 2010ல் சத்யபிரகாஷ்சிங் என்பவரை திருமணம் செய்தார்.

திருமண வாழ்க்கை பெரிய வெற்றி கொடுக்காமல் சில காரணங்களால் ஒராண்டிலேயே அவரை விவாகரத்து பெற்று பிரிந்தார் மோனிகா. இதையடுத்து இந்தி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து வந்தார்.

தற்போதும் சீரியலில் நடித்து வரும் மோனிகா ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். சில விருது விழாக்களில் மட்டும் கலந்து கொண்டு வரும் மோனிகாவை பார்த்த ரசிகர்கள் மின்சார கண்ணா ஐஸ்வர்யாவா இது என்று ஷாக்காகி வருகிறார்கள்.