மனைவி 4 மாத கர்ப்பமான நிலையில் பிரபல நடிகருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.. அதிர்ச்சியில் திரைத்துறை..

Report
1131Shares

தென்னிந்திய சினிமாவில் ஆக்‌ஷன் கிங் என்ற பெயர் மூலம் பிரபலமானாவர் நடிகர் அர்ஜுன் சார்ஜா. பல ஆண்டுகள் சினிமாவில் நடித்து வரும் அர்ஜுன் தனது மகளையும் நடிகையாக அறிமுகப்படுத்தியுள்ளார்.

இவருடைய நெருங்கிய மருமகனாக இருப்பவர் சிரஞ்சீவி சார்ஜா. அர்ஜுனுடன் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவருக்கு கடந்த 2018ல் அர்ஜுனின் தலைமையில் திருமணம் நடைபெற்றது. சிரஞ்சீவி சார்ஜாவும் நடிகை மேக்னா ராஜும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் முடிந்து நடிகை மேக்னா ராஜ் 4 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென நடிகர் சிரிஞ்சீவி சார்ஜாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.

மனைவி 4 மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில் நடிகர் சிரஞ்சீவிற்கு இப்படி நடந்திருப்பது சினிமாத்துறையே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

அவரது இறுதி சடங்கில் நடிகர் அர்ஜுன் மற்றும் பிரபலங்கள் கலந்துகொண்டு வருகிறார். பல நட்சத்திரங்களும் ஆழ்ந்த இரங்கலை நடிகை மேக்னாவிற்கு தெரிவித்தும் வருகிறார்கள்.