கரகாட்டகாரன் படத்தில் இந்த நடிகர்தான் நடிக்க இருந்தது!.. பறிமோன படவாய்ப்பால் உதறிய சினிமாத்துறை..

Report
887Shares

தமிழ் சினிமாவில் காமெடி காதல் அனைத்தும் கலந்து 1989 ஆம் ஆண்டு ராமராஜன், கனகா நடிப்பில் கங்கை அமரன் இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது கரகாட்டகாரன்.

இப்படத்தினை கங்கை அமரன் இயக்கிய இப்படத்திற்கு இளையராஜாவின் இசை இந்த படத்திற்கு பெரிய தூணாக அமைந்தது. அதேபோல் கவுண்டமணி செந்தில் கூட்டணியில் உருவான வாழைப்பழ காமெடியை பெரியளவில் பேசப்பட்டது.

இப்படத்தின் மூலம் பெரும் வரவேற்பை பெற்றவர் மக்கள் நாயகன் ராமராஜன். இதன்பின் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். 30 ஆண்டுகள் இப்படம் வெளியாகிய நிலையில் இந்த படம் ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக ஓடி வசூலை வாரி குவித்தது. இன்று 100 கோடி, 200 கோடி என்று சொல்லும் அளவுக்கு அப்போதே வசூலில் பட்டையை கிளப்பியது.

இந்நிலையில் கரகாட்டக்காரன் படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது நடிகர் மைக் மோகன். அப்போது அவர்தான் பிரபலமான நடிகராக திகழ்ந்து வந்தார்.

முதலில் மைக் மோகன் தான் கரகாட்டக்காரன் படத்தில் கதைக்கு சரியாக இருப்பார் என்றும், ஆனால் கிராமத்து கதாபாத்திரம் என்றால் ராமராஜன் தான் சரி என தேர்வு செய்துவிட்டார்களாம்.

இதனால் அந்த கால கட்டத்தில் மைக் மோகனை தள்ளிவிட்டு முன்னேறிய நிலைக்கு ராமராஜனுக்கு கரகாட்டகாரன் படம் தந்தது.