லேடி சூப்பர் ஸ்டாருக்கும் காதலனுக்கும் கொரானாவா?.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
98Shares

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து புகழ் பெற்று வருபவர் நடிகை நயன்தாரா. ஐய்யா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியும் தொகுப்பாளினியாக இருந்து பிரபலமாகி புகழ் பெற்றார்.

இதையடுத்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.

தற்போது கொரானா லாக்டவுனால் வீட்டிலேயே இருக்கும் நயன்தாரா காதலித்து வரும் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து சில புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை நயன்தாராவிற்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கொரானா அறிகுறிகள் இருப்பதாக செய்தி பரவியுள்ளது.

இதையறிந்த நயன்தாராவிற்கு நெருக்கமான ஒருவர் அப்படி ஒரு செய்தி வதந்தியே என்று கூறியுள்ளார். படப்பிடிப்பு சமயங்களில் நயன்தாரா மற்றவர்களில் நலனை கருத்தில் கொண்டுள்ளவர். அதனால் தனிமனித விலகலை கடைப்பிடித்து வந்தார் எனவும் லாக்டவுனில் எங்கும் செல்லாமலும் இருந்து வருகிறார்.

மேலும் விக்னேஷ் சிவன் இயக்குநம் குறும்படத்தின் புரொடக்‌ஷன் பணிகளை அவரது அலுவலத்திலேயே இருந்து செய்து வருகிறார் என்று கூறியுள்ளார்.