அம்மாவின் அழகையே அதிரவைக்கும் அழகில் செல்வமணி-ரோஜாவின் மகளா இது?.. வைரலாகும் புகைப்படம்..

Report
547Shares

80களில் கொடிகட்டி முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரோஜா. செம்பருத்தி என்ற படத்தின்ன் மூலம் அறிமுகமாகி இதைதொடர்ந்து அவர் குடும்ப பாங்காக இருக்கும் கதாபாத்திரத்தையே தேர்ந்தெடுத்து நடித்தார். அது மட்டும் இல்லாமல் கவர்ச்சிக்கு என்று சில கட்டுப்பாடை வைத்துதான் சினிமாவிலேயே காலடி வைத்தவர் நடிகை ரோஜா.

சினிமாவில் நடிக்கும் போது நடிகை ரோஜா தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ஒரு இயக்குனரின் மனைவியாக திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவை விட்டே விலகி விட்டார்.

தற்போது அரசியலில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி மக்களுக்கு சேவை செய்து வருகிறார். செல்வமணியை திருமணம் செய்த ரோஜாவிற்கு தற்போது ஒரு ஆண் பிள்ளையும் பெண் பிள்ளையும் இருக்கிறது. இவர்கள் இருவருமே ரோஜாவைப் போலவே மிகவும் அழகு உடையவராக இருப்பார்களாம்.

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் ரோஜா தனது மகனின் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்தார்.

மேலும் இவரது மகள் அன்ஷு மல்லிகாவின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அம்மாவின் அழகையே அதிரவைக்கும் அழகில் இருக்கும் ரோஜாவின் மகளை பார்த்தும் ஷாக்காகி வருகிறார்கள்.