பெருகிவரும் பிரபலங்களின் தற்கொலைகள்.. சுஷாந்தை தொடர்ந்து மற்றொரு இளம் நடிகர்!! கதறி அழும் இளம்மனைவி..

Report
44Shares

சினிமாவில் பெரும்பாலான பிரபலங்கள் பிரச்சனைகளால் சூழ்ந்து வாழ்ந்து வருவார்கள். இது தற்கொலை வரை சென்று செல்ல நேரும். அந்தவகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் இறந்தபின் நட்சத்திரங்களின் மன அழுத்தம் குறித்த விவாதங்களும், தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வும் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. இது பற்றி பாலிவுட் சினிமாவில் பெரும் பிரச்சனையாக கருத்தப்பட்டு வருகிறது.

அதை தொடர்ந்து கன்னட இளம் நடிகரான சுஷீல் கவுடா என்பவரும் மன அழுத்தம் காரணமாக ஜூலை-8 தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிலையில் மராத்திய நடிகர் அஷுதோஷ் பக்ரே என்பவரும் மன அழுத்தம் காரணமாக தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிகழ்வு மீண்டும் சினிமா வட்டாரத்தை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவருடைய மனைவி மாதுர்ரி தேஷ்முவுடன் கூட்டுக்குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார் நடிகர் அஷுதோஷ். நேற்றுமாலை அவரது அம்மாவிடம் தூங்கப்போவதாக கூறி மேல் மாடியில் இருக்கும் அவரது அறைக்கு சென்றுள்ளார்.

நீண்ட நேரம் வீட்டில் உள்ளவர்கள் அவர் அறைக்கு சென்று பார்த்துள்ளனர். பார்த்தை அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் காட்சியாக தூக்கிட்டு தொங்கியபடி இருந்துள்ளார்.

அவருடைய பெற்றோர் கொடுத்த தகவலின் பேரின் பாக்ரேவின் உடலைக் கைப்பற்றிய போலீசார் உடல் பரிசோதனைக்காக அனுப்பினார்கள். தற்கொலைக்கான காரணம் குறித்தும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.