தந்தையின் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் தமன்னா பெற்றோருக்கு கொரானா உறுதி.. அதிர்ச்சியில் பிரபலங்கள்..

Report
88Shares

தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அதன்பின் தமிழ், தெலுங்கு என பல படங்களில் முன்னனி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது லாக்டவுன் என்பதால பெற்றோர்களுடன் நாட்களை கழித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது தந்தை சந்தோஷ் படியா மற்றும் தாய் ரஜனி படியாவிற்கு கொரானா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதில் இருவருக்கும் கொரானா வைரஸ் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து தமன்னா வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களுக்கும் தமன்னாவிற்கு பரிசோதனை செய்யப்பட்டதில் இல்லை என்று உறுதி செய்ய்ப்பட்டது.

இதனை அவரது சமுகவலைப்பக்கத்தில் குறிப்பிட்ட அனைவரும் என் பெற்றோர் நலம்பெற பிராத்தனை செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார் தமன்னா. இதையறிந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர். கடந்த வாரம் தான் தமன்னாவின் தந்தையின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்கள்.