எளிமையான காரில் வந்து சர்ப்ரைஸ் கொடுத்தார் தளபதி.. திருமணத்தின் நிகழ்வை ஓபனாக பேசிய அஞ்சனா

Report
23Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்து மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதையடுத்து, தற்போது பிரபல தொகுப்பாளினி அஞ்சனா தன்னுடைய திருமணத்தில் தளபதி விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் குறித்து பேசியுள்ளார்.

அதில், தன்னுடைய திருமணத்திற்கு தளபதி விஜய் வருவார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் திடீரென என்ட்ரி கொடுத்து எங்களுக்கு மிகப்பெரிய சப்ரைஸ் கொடுத்தார்.

மேலும், மிக பிரம்மாண்டமான காரில் வந்து இறங்குவார் என நினைத்தால் மிகவும் எளிமையான காரில் வந்திருந்தார் என கூறியுள்ளார்.

அஞ்சனா பேட்டியில் பேசிய இந்த தகவல் தற்போது விஜய் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.