புற்றுநோயால் உடல் ஒல்லியாகி அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் தவசி!.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
13Shares

சினிமாவில் பல நடிகர் நடிகைகள் படவாய்ப்பில்லாமல் தூக்கி வீசப்பட்டு வருகிறார்கள். பிரபலங்கள் சினிமாவில் ஜொலிக்க காரணமாக இருப்பவர்களில் ஒரு பங்கு சக நடிகர் நடிகைகள் தான். ஆனால் அவர்கள் கண்டும்காணாமல் போய்விடுகிறார்கள்.

அந்தநிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் நடிகர் தவசி. உணவுக்குழாயில் தொற்று ஏற்பட்டு புற்று நோய் சிகிச்சை பெற்று உடல் மெலிந்து எலும்பு தெரியும் அளவிற்கு மாறியுள்ளார் தவசி. இப்படிபட்ட நடிகருக்கு இதுவரை நடிகர் சங்கம் சார்ந்த தலைவர்கள் எட்டிப்பார்க்கவில்லை.

ஆனால் மருத்துவரும் எம்பியுமான ஒருவர் உதவியுள்ளார். இவரை அடுத்து நடிகர் விஜய் சேதுபதி ரூ.1லட்சமும், சிவகார்த்திகேயன் 25,000மும், நடிகர் சூரி 20 ஆயிரமும் சிகிச்சைக்கான உதவிகளையும் செய்துள்ளனர்.

இருப்பினும், 100 சம்பளம் வாங்கும் அளவிற்கு தமிழ் சினிமாத்துறை உறுப்பினர்கள் இருந்தும் இப்படியான நடிகர்களுக்கு நடப்பது வேதனையளிக்கிறது என்று நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.