கவுண்டமணிக்கு கிடைத்த வரவேற்பு செந்திலுக்கு கிடைக்காதது ஏன்? இதுதான் உண்மையா!

Report
59Shares

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவானாக 80, 90களில் கொடிகட்டி பறந்த நடிகர்கள் கவுண்டமணி-செந்தில். இருவரும் கோடி சேர்ந்து நடித்த படத்திற்காகவே ரசிகர்கள் படங்களுக்கு செல்வார்கள் என்று கூறுவார்கள். அந்த அளவில் இருவரின் காமெடி கலாட்டா இருக்கும்.

ஆனால், உண்மையில் செந்திலை விட கவுண்டமணி ஒரு படி மேல்தான். கவுண்டமணியால் சர்வ சாதாரணமாக செந்தில் இல்லாமல் ஒரு காமெடி காட்சியை சிறப்பாக செய்து கொடுக்க முடியும்.

அதுமட்டுமில்லாமல் கவுண்டமணி செந்தில் இல்லாமல் பல படங்களில் தனி ஒரு காமெடியனாகவும் கலக்கி இருப்பதை பல படங்களில் பார்த்திருக்கிறோம்.

செந்தில் பெரும்பாலும் கவுண்டமணி இல்லாத காமெடி காட்சிகளில் அவ்வளவாக ரசிகர்களை கவரவில்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் கவுண்டமணி செந்திலை அடித்தால் தான் செந்திலுக்கு பெயர் என்கிற அளவுக்கு இருந்தது.

செந்திலுக்கு திறமை இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் கவுண்டமணி அளவுக்கு தனி ஒருவராக ஒரு காமெடி காட்சியை தூக்கி நிறுத்தும் அளவுக்கு வல்லமை இருக்கிறதா என்று கேட்டால் கேள்விக்குறிதான்.

ஆனால் கோலிவுட் வட்டாரங்களில் வேண்டுமென்றே கவுண்டமணி மற்றும் செந்தில் கூட்டணியில் பெரும்பாலும் கவுண்டமணிக்கு தமிழ் சினிமாவில் கிடைத்த வரவேற்பு அளவுக்கு செந்திலுக்கு கிடைக்கவில்லை என தற்போது வரை பேச்சுக்கள் வந்து கொண்டிருப்பதை பார்க்கிறோம். ஆனால் இதற்கு திறமையின் அடிப்படையில் அந்தகால இயக்குநர்கள் கவுண்டமணியை பயன்படுத்திக்கொண்டனர்.

உண்மையில் கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் இவர்களில் யார் சிறந்தவர்? நீங்களே கூறுங்களேன்..