பெண் இயக்குநர் பின்னால் சுற்றும் முன்னனி தமிழ் தெலுங்கு நடிகர்கள்? இதுதான் காரணமாம்!

Report
22Shares

தமிழ் சினிமாவில் முன்னனி ஆண் இயக்குநர்கள் பலர் இருக்கும் நிலையில் குறைந்த அளவில் தான் பெண் இயக்குநர்கள் இருக்கிறார்கள். அப்படி இருந்தாலும் நடிகை நடிகர்கள் அவர்களின் படங்களில் நடிக்க தயங்குவார்கள்.

அப்படி சமீபத்தில் வெளியான மெகா ஹிட் கொடுத்த இரு படங்கள் மூலம் அலையவிட்டு வருகிறார் ஒரு பெண் இயக்குநர். பிரபல இயக்குனர் மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்த சுதா, 2010 ஆம் ஆண்டு வெளிவந்த ‘துரோகி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படம் தோல்வியை தழுவியது.

இதைத்தொடர்ந்து கடந்த 6 வருடங்கள் கழித்து ‘இறுதி சுற்று’ என்ற படத்தை மாதவனை கதாநாயகனாக வைத்து இயக்கி மொத்த திரையுலகையும் வியக்க வைத்தார் சுதா கொங்கரா. இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றதோடு, அதே படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்து இயக்கினார் சுதா.

தற்போது தமிழில் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு ‘சூரரைப்போற்று’ என்ற படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்தப்படம் OTT-யில் வெளியானாலும் நல்ல விமர்சனங்களையும், வரவேற்பையும் தமிழ் மக்களிடையே பெற்றுள்ளது.

மேலும் ‘ஆகாசம் நீ ஹடு ரா’ என்ற பெயரில் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்த பல தெலுங்கு ஹீரோக்கள் தங்களை வைத்து படம் இயக்குமாறு சுதா கொங்கரா மொய்த்துக்கொண்டு இருக்கின்றனராம்.

அதாவது சுதா கொங்கராவின் இயக்கத்தில் ஓரிரு படங்கள் வெளிவந்திருந்தாலும், படங்கள் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் ஹீரோக்களுக்கு பெரும் பெயரை சம்பாதித்து கொடுத்துள்ளது.

இதனால் பல தெலுங்கு நடிகர்கள் அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததோடு, தங்களையும் ஹீரோவாக வைத்து படத்தை இயக்கி தருமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஆனால் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட சுதா, தனது அடுத்த படத்தையும் தமிழில் இயக்கவே விரும்புவதாக கூறப்படுகிறது.

எனவே இந்தச் செய்தியை கேட்ட ரசிகர்கள் பலர், ‘யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்’ என்று கூறி, சுதாவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.