மாடியிலிருந்து தவறி விழந்த பாரதிராஜா பட நடிகர் பாபு.. 20 வருடமாக உயிருக்கு போராடும் பரிதாபநிலை

Report
29Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களை இயக்கி வளர்த்து விட்ட இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் பாரதிராஜா. அவரின் படத்தில் சில காட்சிகள் நடித்தால் போது என்று நினைப்பவர்கள் வரிசையில் என் உயிர்த் தோழன் படத்தில் அறிமுகமானவர் நடிகர் பாபு.

அப்படத்திற்கு சில படங்களில் நடித்தாலும் கையில் 14 படங்களை தட்டிச்சென்றார் நடிகர் பாபு. ஆனால் மனசார வாழ்த்துங்களேன் என்ற படத்தில் நடித்து கொண்டிருந்த போது சண்டைகாட்சிக்காக மாடியில் இருந்து குதித்தபோது அவரின் முதுகு புறத்தில் அடிபட்டு சிகிச்சைக்கு பிறகு காப்பாற்றப்பட்டார்.

இதனால் அவரால் கடந்த 20 ஆண்டுகளாக எழுந்து நடமாட முடியாமல் போனது. தற்போது வரை படுத்த படுக்கையாக கடந்த 20 வருடங்களாக இருந்ததை தெரிந்து கொண்ட பாரதிராஜா அவரை சந்தித்து கண்கலங்கி உதவியையும் செய்துள்ளார்.

அவர் சந்தித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.