
தமிழ் சினிமாவில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸிக்கு பெரும் வெற்றியை தேடித்தந்த படங்களில் முக்கியமானது கஜினி. சூர்யா நடிப்பில் மெகா ஹிட் கொடுத்து வசூலிலும் வாரிக்குவித்தது. அந்தவகையில் இப்படத்தின் கதையும் ஒளிப்பதிவும் பிரமாதமாக அமைந்தது.
அந்தவகையில் இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க பிரபல தெலுங்கு நடிகரான பவன் கல்யாணிடம் ஏ.ஆர். முருகதாஸ் கேட்டுள்ளாராம். ஆனால் அப்படத்தினை வேண்டாம் என்று ஒதுக்கி வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளார் பவன் கல்யாண்.
அதற்கு காரணம் அப்படத்தில் மொட்டை அடித்து பாதி படம் வரை நடிக்க வேண்டும் என்பதால் தான் பவன்கல்யாண் ஒதுக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. அப்படி அப்படத்தில் நடித்திருந்தால் வேற லெவலுக்கு சென்றிருப்பார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
தற்போது அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தினை தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார்கள். அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார் நடிகர் பவன் கல்யாண்.