மாஸ்டர் ஒருநாள் வசூல் இத்தனை கோடியா? சென்னையில் 50% இருக்கையில் இப்படியொரு சாதனை!

Report
8Shares

தமிழ் சினிமா முழுவதும் கடந்த ஒரு வருடங்களாக எதிர்ப்பார்த்திருந்த நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் நேற்று ஜனவரி 13ல் தியேட்டரில் வெளியாகியது. ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்போடு காலை முதலே தமிழ்நாடு மற்றும் கேரளா, கர்நாடகாவில் ரிலீசானது.

ரிலீசாகி ஒரு நாள் முடிந்த நிலையில் மாஸ்டர் படத்தின் வசூல் சாதனை படைத்திருக்கிறது. தியேட்டரில் 50% இருக்கைகளுக்கு அனுமதி என்ற நிலையில் வசூல் ரீதியாகவும் மாஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மட்டும் ரூ.23 கோடி வசூல் செய்திருப்பதாகவும், கர்நாடகா மற்றும் கேரளாவில் முதல் நாளான நேற்று ரூ.6 கோடியும், மொத்தமாக ரூ.40 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் மட்டும் முதல் நாள் வசூலாக ரூ.1.21 கோடி வசூல் செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.