காலா படப்பிடிப்பில் நடந்த பரிதாப மரணம்! பலரையும் அதிரவைத்த தகவல்

Report
411Shares

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா பாடம் வரும் ஜூன் 7 ல் வெளியாகவுள்ளது. அவரின் அரசியல் வருகையால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் கூடியுள்ளது.

கபாலி பட இயக்குனர் ரஞ்சித் இயக்க படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார். இப்படத்திற்காக மும்பையில் இருக்கும் தாராவி நகரம் போல தத்ரூபமாக செட் அமைத்திருக்கிறார் கலை இயக்குனர் ராம லிங்கம்.

இதற்காக படக்குழு 15 ஏக்கர் இடத்தை செட் ஆக மாற்றியுள்ளது. இதற்கான செலவு ரூ 20 கோடி ஆனதாம். இந்த செட்டில் தினமும் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும்.

அங்கு செட் அமைக்கும் வேலை செய்பவர்களுக்கு ஏதாவது காயங்கள் என நடந்துகொண்டே இருக்குமாம். அவர்களுக்காகவே பிரத்யேகமாக தனி வாகனத்தை அவர்களின் முதலுதவிக்காகவே வைத்திருப்பார்களாம்.

ஆனால் ஒரு நாள் வேலைக்கு வந்த நபர் ஒருவர் அடிபட்டு இறந்தது படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சி. வேலைக்கு வந்த முதல் நாள் அவருக்கு இப்படியானது மற்றவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியதாம்.

17294 total views