ரஜினி, கமல் படங்களின் முக்கிய இயக்குனர், தயாரிப்பாளர் மரணம்! திரையுலகினர் சோகம்

Report
170Shares

தமிழ் சினிமா பன்முகத்திறமை கொண்ட பலர் இருக்கிறார்கள். அதில் ஒருவர் முக்தா சீனிவாசன். இவர் பல நல்ல படங்களை திரையுலகிற்கு தந்தவர். உதவி இயக்குனராக இருந்தவர் பின் இயக்குனராக, தயாரிப்பாளராக, கதாசிரியராகவும், எழுத்தாளராகவும் வலம் வந்தார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த அந்தமான் காதலி, இமயம், பரீட்சைக்கு நேரமாச்சு, கீழ் வானம் சிவக்கும் படங்களை இயக்கினார். ஜெயலலிதாவின் 100 வது படமான சூரியகாந்தி படத்தை தயாரித்து இயக்கியவர் இவரே.

ரஜினி நடித்த பொல்லாதவன், சிவப்பு சூரியன் படத்தை இயக்கியதோடு கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தையும் தயாரித்தவர் இவர் தானாம். இவர் 350 சிறுகதைகள், மூன்று நாவல்கள் எழுதியுள்ளார்.

சென்னை தி.நகரில் புத்தக பிரியர்களுக்காக வாடகை நூலகம் நடத்தி வருகிறாராம். தற்போது 88 வயதான உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று இரவு காலமானார். அவரது மறைவால் வருந்தும் குடும்பத்தினருக்கு சினிஉலகம் இரங்கலை பதிவு செய்கிறது.

6955 total views