காலாவுக்கு நடுவிலும் அஜித் ரசிகர்களின் தாறு மாறு கொண்டாட்டம்!

Report
130Shares

ரஜினியின் காலா படம் அஜித், விஜய் ரசிகர்களையும் கொண்டாடவைத்துள்ளது. படத்திற்கு நல்ல வசூலும், வரவேற்பும் உலகளவில் கிடைத்துள்ளது. சிறப்புக்காட்சிகளை திரையிட அரசும் அனுமதித்துள்ளது.

இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கு இன்று வேறு லெவலான கொண்டாட்டம் என்று தான் சொல்லவேண்டும். எத்தனை அஜித் படங்கள் இருந்தாலும் இது போல் வருமா என சொல்ல அஜித்தின் சிட்டிசன் படம் ஒன்றே போதும்.

அரசியல் அக்கிரமங்களை அலசி எடுத்து அன்றே சாட்டையடி கொடுத்திருப்பார். அவரின் படங்களில் இது மிக முக்கியமான ஒன்று. 100 நாட்கள் ஓடி வசூல் சாதனை படைத்தது.

கடந்த 2001 ல் இதே ஜூன் 8 ல் வெளியான சிட்டிசன் இன்றுடன் 17 வருட கொண்டாட்டத்தை எட்டியுள்ளது. இதை ரசிகர்கள் #17yrsofmegablockbustercitizen என கொண்டாடிவருகிறார்கள்.

தேவா இசையில் மேற்கே உதிக்கும் சூரியனே பாடல் இப்போதும் ரசிக்கும் வண்ணம் இருக்கும்.

5180 total views