சினிமாவில் வாய்ப்பு வாங்கிதருவதாக பெண்களை ஏமாற்றிய புரோக்கர் - வெளியான வீடியோவால் அதிர்ந்த திரையுலகம்

Report
385Shares

தமிழ் சினிமா மட்டுமல்லாது உலகம் முழுவதும் சினிமா வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

மீடு விவகாரம் சூடுபிடித்து கொஞ்சம் ஓய்ந்துள்ள நிலையில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி 20க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையுடன் துணை நடிகர்கள் ஏஜெண்ட் ஒருவர் விளையாடியுள்ளார்.

முன்னணி துணை நடிகர் ஏஜெண்டாக உள்ள கேஸ்டிங் மோகன்...! புதிய படத்தில் நடிக்க நடிகைகள் தேவை என முகநூலில் விளம்பரம் வெளியிடுவது மோகனின் வழக்கம் என்றும், அப்படி வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை மது அருந்தச் செய்து ஆடவைத்து ரசிப்பது இவரது வாடிக்கை என்றும் கூறப்படுகிறது

கேஸ்டிங் மோகன் தனது படுக்கை அறையில் ரகசிய காமிராவை பொருத்தி வாய்ப்புக் கேட்டு வரும் நடிகைகளை ஆபாசமாக படம்பிடித்ததாக பாதிக்கப்பட்ட துணை நடிகை மித்ரா குற்றஞ்சாட்டுகிறார்.

இந்த வீடியோக்களை தமிழ் திரையுலகினர் பலரும் இருக்கின்ற வாட்ஸ் ஆப் குரூப்பில் மித்ரா பதிவிட்ட அடுத்த நொடி பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதில் சிலருக்கு தெரிந்த பெண்கள் வீடியோவில் பதிவாகி இருப்பதை கண்டு அதிர்ந்து போயுள்ளனர்.

மோகன் மீது ஆதாரங்களுடன் காவல்துறையில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

15879 total views