உயிரோடு இருக்கும் மகளுக்கு இறுதி அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை! ஏன் தெரியுமா?

Report
14Shares

பொதுவாக பெற்றோர் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்துகொள்ளும் பிள்ளைகளை நோக்கி ‘நீ செத்துட்டதா நினைச்சுக்கிறேன்’என கோபத்தில் குமுறுவார்கள்.

ஆனால் அவர்களையெல்லாம் மிஞ்சி இந்தியாவில் ஒரு கோபக்காரத் தந்தை ஒருவர் கைக்காசை செலவழித்து காதல் திருமணம் செய்த மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

தமிழநாடு வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அடுத்த குப்பராஜபாளையத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவர்கள் பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் தன் மகளின் மீது அதிகளவில் பாசம் வைத்திருந்த அப்பா சரவணன் தனது மகள் சொல்பேச்சை கேட்காமல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரத்தில், தனது மகள் இறந்துவிட்டதாக ஊரை சுற்றிலும் இன்று கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்துள்ளார். அந்த பேனரில் தனது மகள் நேற்று மதியம் இறந்துவிட்டதாகவும் அவளது உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யபடுகிறது என வாசகம் எழுதப்பட்டுள்ளது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

1013 total views