இருமலுக்காக சென்ற இளம்பெண்ணிற்கு தவறான ஊசிபோட்ட மருத்துவர்கள்.. நடந்த பரிதாபம்..

Report
15Shares

சென்னையில் அனகாபுத்தூரைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் லிபியா இருமல் வாந்தியால் அவதியுற்றுள்ளார். இதனால் அங்குள்ள ஜெயம் க்ளினிக்கிற்கு சென்றுள்ள லிபியா பரிசோதனைக்கு சென்றுள்ளார். சுஜாதா கருணாகரன் என்ற மருத்துவரிடன் சென்றுள்ளார்.

இருமலுக்காக அவரது கையில் நரம்பில் ஊசி போடப்பட்டுள்ளது. இதனால் சுயநினைவை இழந்த லிபியா மயங்கி விழுந்துள்ளார். அதிர்ச்சியடைந்த மருத்துவர் சுஜாதா குரோம்பேட்டை மருத்துவமனையில் சேர்க்க சொல்லியுள்ளார்.

இதனால் அவரது தாயார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் கேட்டும் தர மறுத்துள்ளது மருத்துவமனை. ஆட்டோவில் மகளை கொண்டு சேர்ந்துப் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் லிபியா 30 நிமிடங்களுக்கு முன்பே இறந்துள்ளார் என்று கூறி அதிர்ச்சியளித்தனர்.

இதனால் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சியில் மகள் இறந்ததற்கு காரணம் சுஜாதா மருத்துவர் தான் என்று கூறி போலிசில் புகாரளித்துள்ளார். மருத்துவரை கைது செய்யகோரி மரியலில் ஈடுபட்டுள்ளனர்.