கடவுளின் பெயராலும் மூட நம்பீகையாலும் இடம்பெறுகின்ற சில கொடூர சம்பவங்கள்

Report
162Shares

என்னதான் கம்பியூட்டர் யுகத்தில் நாம் வாழ்ந்து வந்தாலும் , கடவுளின் பெயரை கூறியோ அல்லது நம்பிக்கையின் அடிப்படையிலோ சில மூடபழக்க வழகங்களை சில இடங்களில் இன்னும் கடைப்பிடிதுக்கொண்டேதான் இருகின்றார்கள்.

அந்தவகையில் சில இடங்களில் நம்பிக்கையின் அடிபடையிலும் கடவுளின் பெயராலும் இடம்பெறுகின்ற சில கொடூர சம்பவங்களை பார்க்கலாம்.

கன்னம் மற்றும் வாய்ப்பகுதிகளில் கூர்மையான ஆயுதங்களால் குத்துதல்,

சீனாவில் இருக்கிற மக்கள் இந்த விழாவை கொண்டாடுகிறார்கள். புக்கட் வெஜிடேரியன் ஃபெஸ்டிவல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் கொண்டாடப்படுகிறது சுமார் பத்து நாட்கள் வரை நடக்கும் இந்த திருவிழாவின் போது யாருமே அசைவ உணவுகளைச் சாப்பிட மாட்டார்களாம். விலங்குகளை பெருமை படுத்தும் விதமாக கன்னம் மற்றும் வாய்ப்பகுதிகளில் கூர்மையான ஆயுதங்களால் குத்திக் கொள்கிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த சடங்கு முறைகள் நடைமுறையில் இருக்கின்றன. இப்படிச் செய்வதினால் தங்களுக்கு செல்வம் பெருகும் என அம் மக்கள் நம்புகிறார்களாம்.

கரடி தெய்வமாக வழிபடுவது

ஐனு என்ற இன மக்கள் ஜப்பான் மற்றும் ரஷ்யாவில் வசிக்கிறார்கள் இவர்களிடயே மிகவும் விசித்திரமான நடைமுறை இருக்கிறது.

அதாவது இவர்கள் கரடியை தெய்வமாக நினைத்து வழிபடுகிறார்கள். ஆனாலும் கரடியை பலியிட்டால் மனித இனத்தில் ஆன்மா சாந்தியடையும் என்றும் நம்புகிறார்கள்.

அதற்கக கரடியை பலியிடுவதற்கு முன்னால் குட்டியிருந்தால் அதனை முதலில் பிரிக்கிறார்கள் தனியாக அந்த கரடியை கூண்டில் அடைத்து அது தன் குட்டிகளைப் பற்றி மறந்த பிறகு கரடியை ஈட்டியால் குத்திக் கொல்கின்றார்களாம்.

வயது முதிர்ந்தவர்களை ஐஸ்கட்டியில் மிதக்கவிடுவது

எஸ்கிமோக்களில் வாழுகின்ற மக்கள் பெரும்பாலும் தங்களது உணவுக்கும் வாழ்வாதாரத்திற்கும் பெரும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனால் வயது முதிர்ந்தவர்கள் என்றாலே அங்கு திண்டாட்டம் தான்.

அவர்களை கவனித்துக் கொள்ள மறுத்து ஒரு பாயில் கட்டி ஐஸ்கட்டியில் மிதக்க விட்டு விடுகிறார்கள். அப்படியே பசியாலும் குளிராலும் அந்த முதியவர்கள் இறந்து விடுகிறார்கள். அவர்களின் உடலை அங்கிருக்கும் விலங்குகள் கொத்தித் தின்றுவிடுகிறது.

மாட்டின் ரத்தம் குடிப்பது

கென்யாவின் தெற்கு பகுதி மற்றும் தன்சானியாவின் வடக்குப் பகுதியில் வாழ்கின்ற மாசாய் என்ற பழங்குடியின மக்கள் வாழ்கிறார்கள் இவர்கள் குழந்தை பிறந்த உடனும் திருமணத்தின் போதும் மாட்டின் நரம்பை அறுத்து ரத்தம் குடிப்பார்களாம்.

எறுபு கூடையை கையில் அணிதல்

சட்டரே மாவே என்று பழங்குடியின மக்கள் மத்தியில் இந்த வழக்கம் இருக்கிறது. அதாவது பத்து வயதிற்கு மேற்பட்ட ஆண் குழந்தைகளுக்கு இந்த சடங்கு நடக்கிறது.

சடங்கின் ஒரு பகுதியாக இரண்டு கைகளிலும் மூங்கிலால் செய்யப்பட்ட ஒரு கூடையை இரண்டு கைகளிலும் அணிவிக்கிறார்கள். அதில் முழுவதும் எறும்பு இருக்கிறது. அதனை கையில் அணிந்தவாரே பத்து நிமிடங்கள் வரை நடனமாட வேண்டும். இதனை எல்லாரும் புல்லட் எறும்பு என்று அழைக்கிறார்கள். காரணம் இந்த எறும்பு கடித்தால் உடலில் புல்லட் துளைத்தால் எத்தகைய வலி ஏற்படுமோ அதே வலி இங்கே ஏற்படுமாம்.

இறந்தவர்களை சாப்பிடுவது

ஜெனிவாவில் இருக்கிற ஃபோர் என்ற பழங்குடியின மக்கள் அவர்களது குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால், அவர்களை எரிக்கவோ புதைக்கவோ மாட்டார்களாம். இறந்தவரின் உடலை அறுத்து உணவு சமைத்து சாப்பிடுகிறார்கள். அவர்களின் உடலை இவர்களே சாப்பிட்டு விடுவதால் அவருக்கு மரியாதையாகவும் அந்த நபரின் புண்ணியங்கள் தங்களுக்கே கிடைப்பதாகவும் நம்புகிறார்கள்.

குழந்தைகளை தாண்டி ஓடுவது

ஸ்பெயினில் பச்சிளம் குழந்தைகளை நடு வீதியில் படுக்க வைத்து , சிகப்பு மற்றும் மஞ்சள் நிற உடை அணிந்தவர்கள் வேகமாக ஓடி வந்து குழந்தையை தாண்டி குதிக்கிறார்கள். சிகப்பு மற்றும் மஞ்சள் பேயின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இப்படி உடையணிந்தவர்கள் தாண்டச் செய்வதால் குழந்தைக்கு பயம் வராது என்று அங்கே இருக்கின்ற மக்கள் நம்புகின்றார்களாம்.

5680 total views