பிரபல நடிகையை தாக்கிய மெடாஸ்டிக் புற்றுநோய்! விரிவான தகவல்கள்

Report
44Shares

காதலர் தினம் பட அழகியான சோனாலி பிந்த்ரே சில நாட்களுக்கு முன் வெளியிட்ட பதிவு பாலிவுட் மட்டுமின்றி இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

புற்றுநோய் என்றாலே பதறிப்போகும் நிலையில், அது மிகவும் முற்றிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது வருத்தத்துக்கு உரியது தான்.

பலவிதமான புற்றுநோய்கள் இருந்தாலும், கருப்பை மற்றும் மார்பகப் புற்றுநோயே பெண்களை அதிகம் தாக்குகின்றன, சோனாலிக்கு ஏற்பட்டது மெடாஸ்டிக் புற்றுநோய்.

மெடாஸ்டிக் புற்றுநோய் என்பது என்ன?

முற்றிய நிலையில் கண்டுபிடிக்கப்படும் புற்றுநோயை மெடாஸ்டிக் புற்றுநோய் என்பார்கள். புற்றுநோய் உருவான இடத்தில் இருந்து பக்கத்தில் இருக்கும் உடல் பாகங்களுக்கும் புற்றுநோய் பாதித்திருந்தால், அதனை மெடாஸ்டிக் என்பார்கள்.

அதாவது புற்றுநோயின் முற்றிய நிலை அல்லது 4வது கட்டத்தில் இருப்பதையே மெடாஸ்டிக் என்கிறார்கள்.

இன்னும் தெளிவாக சொல்லப்போனால்,

வயிற்றுப் பகுதியில் குடலை புற்றுநோய் தாக்கினால் குடல் புற்றுநோய் எனலாம். குடலை தாக்கும் புற்றுநோய், அங்கிருந்து பரவி அருகில் இருக்கும் கல்லீரல், நுரையீரல் போன்ற உடல் பாகங்களுக்கும் பரவி அங்கும் கட்டிகளை ஏற்படுத்தினால், அதனை குடல் / கல்லீரல் / நுரையீரல் புற்றுநோய் என்று கூறாமல் மெடாஸ்டிக் புற்றுநோய் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கண்டுபிடிப்பது எப்படி?

மெடாஸ்டிக் புற்றுநோய்க்கான அறிகுறிகளை கண்டறிவது கடினமான ஒன்றே, ஏனெனில் அதன் தீவிரத்தை பொறுத்து அறிகுறிகள் மாறுபடும்.

  • தசைகள் அல்லது எலும்புகள் பாதிக்கப்பட்டிருந்தால், வலி அல்லது முறிவு ஏற்படலாம்
  • மூளையில் பாதிப்பு இருந்தால், தலைச்சுற்றல், மயக்கம் ஏற்படலாம்
  • நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தால், சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படும்.
  • கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், மஞ்சள்காமாலை அல்லது வயிறு வீங்கும்.
இதனை சரிசெய்ய முடியுமா?

மிகவும் முற்றியநிலையில் கண்டுபிடிக்கப்பட்டால், சில மாதங்கள் அல்லது வருடங்கள் வரை நோயாளிகள் புற்றுநோயுடனே வாழும் நிலை ஏற்படும், இதற்கு காரணம் மிக மெதுவாக குணமடைவதே.

தவிர்ப்பது எப்படி?

வாழ்க்கைமுறைகளில் மாற்றம் மற்றும் சீரான டயட்டின் மூலம் மெடாஸ்டிக் புற்றுநோய் வளர்வதை தடுக்கமுடியும்.

விட்டமின் ஈ உணவுகள், க்ரீன் டீ, முட்டை, சால்மன் டீ, காளான் மற்றும் பால் மெடாஸ்புக் புற்றுநோயை தடுக்கும் உணவுகளாகும்.

2353 total views