சென்ராயனின் அழுக்கு உள்ளாடையை துவைக்க சொன்னாங்க - மமதி புலம்பல்

Report
449Shares

பிக் பாஸ் சீசன் இரண்டு தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அதில் முதல் முறையாக மக்களால் ஓட்டு போடப்பட்டு வெளியேறியவர் மமதி சாரி.

தற்போது அவர் பிரபல நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி தந்துள்ளார். பிக்பாசில் நடந்த பல விடயங்களை அவர் போட்டுடைத்தார்.

அங்கு நடப்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல உள்ளிருப்போரின் வன்மங்கள் வெளிப்படும் தருணங்கள் என்று கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார் மமதி.

எதனால் மமதி இவ்வளவு சீக்கிரம் வெளியே வந்தீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டதற்கு மக்கள் தீர்ப்பு என்று பதிலளித்தார்.

மேலும் தனது ஆடை விடயங்கள் பற்றி கூறுகையில் தமிழர்கள் பார்வை தவறானதாக இருக்காது என்கிற நம்பிக்கையில் தான் அப்படி உடை உடுத்துவதாகவும் வெளிநாட்டு ஆதிக்கத்தால் தூண்டப்பட்டவர்கள்தான் பெண்களை தவறாக பார்க்க முடியும் என்று பதிலளித்தார்.

அதன்பின் டாஸ்க் பற்றி கேட்கப்பட்டபோதுதான் அங்கு நடக்கும் பல உண்மைகள் பற்றி போட்டுடைத்தார் மமதி.

வேலைக்கார டாஸ்கின் போது மும்தாஜிடம் வேண்டுமென்றே சென்ராயனின் அழுக்கு உள்ளாடைகளை கொடுத்து துவைக்க சொன்னதாக அவர் கூறினார்.

அதுமட்டுமல்லாமல் மஹத் , ஷாரிக் ஆகியோரின் உள்ளாடைகளை கூட மும்தாஜ் துவைத்து தந்ததாக மமதி கூறினார்.

மனசாட்சி இல்லாமல் அங்குள்ள சிலர் நடந்து கொள்வதாக மமதி தெரிவித்தார். இதெல்லாம் கேட்கும்போது நமக்கும் அதுதான் தோன்றுகிறது.

டாஸ்க் என்பதற்காக இப்படி செய்தவர்கள் தங்கள் குடும்பத்தினராக இருந்திருந்தால் இவ்வாறு செய்திருப்பார்களா என்றுதான் தோன்றுகிறது.

15893 total views