பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு: பிரபல தொலைக்காட்சிக்கு பொலிஸ் பாதுகாப்பு

Report
41Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியினை தடை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருவதால், சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது பாகமானது கடந்த ஜூன் 17-ம் தேதி முதல் துவங்கி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியினை பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும் சில காட்சிகள் மக்களின் மனதை கெடுக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும், அதனை தடை செய்ய வேண்டும் எனவும் பல்வேறு பொதுமக்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனடிப்படையில் தற்போது 50க்கும் மேற்பட்ட காவலர்கள், சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி அலுவலகத்திற்கு பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியால் குழந்தைகள் தவறான பாதைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே சினிமா துறைக்கு சென்சார் போர்டு உள்ளதை போல் தொலைக்காட்சிகளுக்கு சென்சார் அமைப்பை கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

2417 total views