விராத் -அனுஷ்கா நீங்களே இப்படி பண்ணா நாங்கலாம் எங்க போறது

Report
191Shares

தென்னாப்பிரிக்காவில், 50% தள்ளுபடி உள்ள கடையில் விராட்கோலி - அனுஷ்கா ஷாப்பிங் செய்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த டிசம்பர் 11, 2017 அன்று இத்தாலியில் டஸ்கனி நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் விராட்கோலி அனுஷ்காவின் திருமணம் நடைபெற்றது. அன்றிலிருந்தே அவர்கள் தொடர்பாக ஏதேனும் ஒரு தலைப்பு செய்தி வந்துகொண்டே இருக்கின்றது.

அந்த வகையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அங்கு சென்றுள்ள விராட்கோலி தன்னுடைய மனைவி அனுஷ்காவுடன் தேன் நிலவை கொண்டாடி வருகின்றார்.

இந்நிலையில் தென்னாப்ரிக்க தலைநகர் கேப் டவுனில் ஒரு கடையில் விராட்கோலியும் அனுஷ்காவும் ஷாப்பிங் சென்றுள்ளனர். அங்கு 50 சதவிகிதம் தள்ளுபடி என்ற பதாகை ஒன்று உள்ளது.

அதற்கு கீழே மனைவியின் கைபையை தன் கையில் வைத்துக்கொண்டு மனைவியை பார்த்தபடி நிற்கிறார் விராட். ஆனால் அனுஷ்கா அங்கு உள்ள பொருட்களை பார்த்தவாறு உள்ளார். இந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து நெட்டிசன்கள் பலரும் புதுமண தம்பதியினரை கிண்டலடித்து வருகின்றனர். அந்த வகையில் நெட்டிசன் ஒருவர், "ஒரு பெண் எந்தப் பெயரில் இருந்தாலும் அவர் பெண்தான். 50% ஆஃபர் என்ற அறிவிப்பு எந்த பெண்ணாக இருந்தாலும், அது அனுஷ்காவாகவே இருந்தாலும் கவரவே செய்யும்.

ஒரு ஆண் வேறு பெயரில் இருந்தாலும், விராத் கோலி என்ற பெயரில் இருந்தாலும், அவர் ஷாப்பிங் பேக்'களை தூக்கியே ஆக வேண்டும். கணவர்களுக்கு விதிவிலக்கு இல்லை" என்று ஒருவர் கமென்ட் அடித்துள்ளார்.

5976 total views