தமிழக அரசியலை கலாய்த்து தள்ளிய விஜய்-62! தளபதி படத்தில் இப்படியா!

Report
149Shares

விஜய் 62 படத்தில் தற்போதைய அரசியல் குறித்த காட்சிகள் உள்ளது தெரிய வந்துள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் விஜய் 62. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படம் குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.விஜய் 62 படத்தில் அரசியல் குறித்த காட்சிகள் இருக்கும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போதைய தமிழக அரசியல் குறித்த காட்சிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

விஜய் 62 படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் முதல்வர் ராதாரவியின் கட்அவுட் உள்ளது, பழ கருப்பையா தான் வெளியேறிய கட்சியில் மீண்டும் சேர்வது போன்று உள்ளது. இந்த காட்சியை பார்த்தால் உங்களுக்கு நிஜத்தில் நடந்த எந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது.

தமிழ் படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போதைய அரசியல் சூழலை கலாய்த்திருப்பது தெரியும். ஆனால் விஜய் படத்திலும் கலாய்க்கப்பட்டுள்ளது அனைவருக்கும் வியப்பை அளித்துள்ளது.

இளைய தளபதியாக இருந்த விஜய் தளபதி ஆனார். அவருக்கு அரசியலுக்கு வரும் ஆசை உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். சரியான நேரத்தில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர் படத்தில் தமிழக அரசியல் சூழலை கலாய்த்து காட்சி வைக்கப்பட்டுள்ளது.

6396 total views