அது உடனே நடக்கணும் அவசரம் காட்டும் நயன்தாரா!

Report
194Shares

தமிழ் திரையுலகின் அசைக்க முடியாத நாயகி நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவருக்கு நாயகர்களுக்கு இணையான ரசிகர் பட்டாளமும் உள்ளது.

காதல் கிசு கிசுக்களில் தொடர்ந்து சிக்கி வந்தாலும், இவரது கதை தேர்வு செய்யும் திறமையால் ரசிகர்களின் ரசனைக்கேற்ற திரைப்படங்களை கொடுத்து, அவர் மீது ரசிகர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை தொடர்ந்து தக்க வைத்து வருகிறார்.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரங்களை தேடி தேடி தேர்ந்தெடுத்து நடிக்கும் இவர் நடிப்பில் வெளியான 'அறம்' திரைப்படம் கூட ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி மரியாதையையே நயன்தாராவின் மேல் ஏற்படுத்தி இருந்தது.

அதனை தொடர்ந்து நயன்தாராவின் நடிப்பில் 'கோலமாவு கோகிலா' எனும் திரைப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. அதன் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி இருந்த நிலையில், இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் ரசிகர்களின் மத்தியில் அதிகரித்து உள்ளது.

படப்பிடிப்புகள் அனைத்தும் ஏற்கனவே முடிந்துள்ள நிலையில், தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட இப்படம் யு/ஏ சான்றும் பெற்றுள்ளது.

அறம் போலவே இந்த படமும் தன் சினிமா வாழ்கையில் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என நம்பிக்கை தெரிவித்திருக்கும் நயன்தாரா, இப்படத்தின் ரிலீசினை தள்ளிப் போட விரும்ப வில்லையாம். முடிந்தவரை வெகு சீக்கிரம் கோலமாவு கோகிலாவை ரிலீஸ் செய்ய சொல்லியும் படக்குழுவினரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறாராம்.

9523 total views