ஆயிரம் அடி உயர கட்டிடத்தின் உச்சிக்கு சென்று திரிஷா செய்த வேலை! ஆச்சிரியத்தில் ரசிகர்கள்

Report
25Shares

நடிகை திரிஷா அமெரிக்காவில் 1168 அடி உயர கட்டிடத்தின் உச்சியில் நின்று பேஸ்பால் விளையாட்டை ரசித்த படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

கர்ஜனை, 96, சதுரங்க வேட்டை 2, மோகினி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவற்றின் படப்பிடிப்புக்கள் முடிந்துள்ளன. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தோழிகளுடன் திரிஷா வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றுவருகிறார். அந்தந்த நாடுகளிலிருந்து தனது புகைப்படங்களையும் இணைய தள டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் அமெரிக்காவில் நியூயார்க், டொராண்டோ நகரங்களுக்கு சென்றார். அங்கு வித்தியாசமான அனுபவத்தை உணரும் விதமாக 1168 அடி உயர கட்டிடத்தின் உச்சியில் நின்று புகைப்படம் எடுத்து இணைய தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,’எனக்கு பயமில்லாத நிலைதான் பிடித்திருக்கிறது. அதனால்தான் என்னால் எதையும் செய்ய முடிகிறது.

பறவைபார்வை வேண்டுமென்றால் உயரத்தில் நடப்பதுதான் சிறந்த வழி. எனவேதான் ரோஜர் மைதானத்தில் நடந்த பேஸ்பால் போட்டியை 1168 அடி உயரத்தில் தொங்கியபடி 10 நிமிடம் பார்த்தேன்.

இதுவொரு அற்புத தருணம்’ என தனது கட்டை விரல்களை தம்ஸ்அப் ஸ்டைலில் காட்டி சிரிக்கும் புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் திரிஷா. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரது துணிச்சலுக்கு லைக்ஸ் கொடுத்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.

1528 total views