கலாய்த்தவர்களுக்கு மீண்டும் புகைப்படத்தை வெளியிட்டு தக்க பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை..!

Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக 'பூங்கொடி' என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகை மாளவிகா மேனன். தற்போது தெலுங்கில் தயாராகி வரும் விஜய் தேவரகொண்டாவின் 'ஹீரோ' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் மாளவிகா மேனன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான தன்னுடைய புகைப்படம் ஒன்றை பதிவு செய்தார். இந்த புகைப்படத்தை பார்த்து பலர் பாராட்டினாலும், ஆன்லைனில் இலவச அட்வைஸ் கூறும் ஒருசிலர் இந்த படத்தை கடுமையாக விமர்சனம் செய்ததோடு, இந்த டிரைஸை போட்டதற்கு பதில் டிரெஸ்ஸே போடாமல் இருந்திருக்கலாமே என்று அட்வைஸ் செய்தனர்.

பதிலடி

இந்த அட்வைஸ்களை கவனித்த மாளவிகா மேனன் அவர்களை மேலும் கடுப்பேத்த அதேபோன்ற இன்னொரு புகைப்படத்தையும் பதிவு செய்து, 'ஒரு பெண் எப்படி உடை அணிய வேண்டும் என்று நிறைய அட்வைஸ்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனக்கு பிடித்த உடையை நான் அணிந்துள்ளேன்' என்று பதிலடி கொடுத்து கலாய்த்தவர்களின் வாயை அடைத்துள்ளார் மாளவிகா. மாளவிகாவின் இந்த பதில் வைரலாகி வருகிறது.

2199 total views