எல்லோறும் என்னை காறித்துப்புறாங்க.. பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததுமே லொஸ்லியாவை திட்டிய தந்தை.. வெளியான ப்ரோமோ!

Report
215Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரங்களில் இருந்து ப்ரீஸ் டாஸ்க் நடந்துகொண்டு வருகிறது. இதில் நேற்றைய நிகழ்ச்சியில் முகெனின் தாய் மற்றும் தங்கை உள்ளே வந்து சர்ப்ரைஸ் செய்தார்கள். அதைத்தொடர்ந்து இன்று வெளியான ப்ரோமோவில் முதலில் சேரன் ரகசிய அறையில் இருந்து உள்ளே வந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார்.

அதன் பிறகு யாரும் எதிர்பாராத வேளையில், லொஸ்லியாவின் தந்தை பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அதைக்கண்டதும் லொஸ்லியா கண்ணீர் விட்டு கதறி தந்தையின் காலில் விழுந்து அழுதுள்ளார். அதன் பிறகு தந்தை லொஸ்லியாவை பார்த்து, உன்ன அப்படியா வளர்த்தேன் நானு... என்ன சொல்லி இங்க வந்த அடுத்தவங்க காறித்துப்புறதை என்ன பார்க்கவைக்குற என்று கூறிய கடுமையாக பேசுயுள்ளார். இதைக்கண்ட சேரன் சமாதனப்படுத்தி அவரை உள்ளே அழைத்து செல்கிறார்.

எப்படியும் இன்று பார்வையாளர்களுக்கு லொஸ்லியா செய்த தவறையும், கவினையும் லொஸ்லியாவின் தந்தை கண்டிப்பார் என்று எதிர்ப்பார்த்துள்ளனர்.