கட்டாயம் காதல் திருமணம் தான் செய்துகொள்வேன்.. இலங்கைப் பெண் லொஸ்லியா பேட்டி..!

Report
38Shares

பிக்பாஸ் சீசன் 3-ன் மூலம் கவனம் ஈர்த்த லாஸ்லியா பெற்றோர் சம்மதத்துடன் தான் திருமணம் செய்துகொள்வேன் என கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாம் இடம்பிடித்தாலும் மக்கள் மனதில் முதலிடம் பிடித்தவர் லாஸ்லியா. இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது சக போட்டியாளரான கவினைக் காதலித்தார். ஆனால் இது ரசிகரக்ளுக்கும் லாஸ்லியாவின் பெற்றோருக்கும் பிடிக்கவில்லை.

ஆனாலும் அவர் தன் காதலில் உறுதியாக இருந்தார். இந்நிலையில் பிக்பாஸ் முடிந்து வெளியே வந்து அளித்த முதல் பேட்டியில் ’எனது அப்பா மிகவும் பாசமானவர். என் பெற்றோர்கள் காதல் திருமணம் செய்தவர்கள். நாங்கள் இப்படித் தான் காதலித்தோம் எனச் சொல்லி சொல்லி தான் எங்களை வளர்த்தார்கள். எனவே காதல் திருமணத்திற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

ஆனாலும் பெற்றோர் சம்மதத்துடன் தான் எனது திருமணம் நடக்கும். என்னுடைய பெற்றோர்கள் நாங்கள் சொல்வதைத் தான் கேட்பார்கள். நான் உண்மையாக இருந்திருக்கிறேன் என்று எனது பெற்றோர்களுக்குத் தெரியும்.’ என்று கூறியுள்ளார்.

2139 total views