இதற்கு தான் நான் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை... காரணத்தைச் சொன்ன விஜயசாந்தி..

Report
35Shares

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாகவும் மற்றும் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுபவர் நடிகை விஜயசாந்தி.

இவரின் படங்கள் எல்லாம் அதிரடி, ஆக்‌ஷன் படங்களாகவே இருக்கும். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தெலுங்கில் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவுடன் சரிலேரு நீக்கேவரு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவ்வப்போது ஓரிரு படங்களில் நடிப்பேன் என்றும், அரசியலில் முழுமையாக ஈடுபடப்போவதாகவும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

நான் இதுவரை குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான் காரணம். குழந்தை பெற்றுக்கொண்டால் சுயநலம் வந்துவிடும். நான் பொதுநலத்துடன் செயல்பட விரும்புகிறேன்.

அதைத் தான் ஜெயலலிதாவும் செய்தார். அவரை பின்பற்றி நானும் மகளுக்கு முழுமையாகத் தொண்டு செய்ய என்னை தயார்படுத்திக் கொண்டேன் என விஜயசாந்தி கூறியுள்ளார்.