தீவிர ரசிகருக்கு சல்மான் கான் கொடுத்த அதிர்ச்சி! தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய பரபரப்பு காட்சி

Report
57Shares

செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை நடிகர் சல்மான் கான் பறித்த சம்பவம் இணையத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் நேற்று கோவாவுக்கு சென்றுள்ளார்.

தனது பாடிகார்ட்களுடன் வந்த அவர் விமானத்தில் இருந்து இறங்கி விமான நிலையத்துக்கு வெளியே நடந்துகொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்னால் சென்ற இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றார்.

இதனால் கோபமான நடிகர் சல்மான் கான், அவரது செல்போனை பறித்துவிட்டு வேகமாகச் சென்றார். இதனால் அந்த இளைஞர் அதிர்ச்சி அடைந்தார். இதை ஒருவர் காணொளி எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்த காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அது மட்டும் அல்ல, அனுமதி இல்லாமல் இப்படி செல்ஃபி எடுப்பதை பலர் கண்டித்து வருகின்றனர்.

2111 total views