புன்னகை அரசி சினேகா குழந்தை பிறந்த பிறகு இணையத்தில் வெளியிட்ட புகைப்படம்! ஒரே குஷியில் ரசிகர்கள்.. எப்படி இருக்கிறார் தெரியுமா?

Report
178Shares

புன்னகை அரசி சினேகாவுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதனை "தை மகள் பிறந்தாள்" என பிரசன்னா ட்விட்டரில் அறிவித்திருந்தார்.

தற்போது, நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது எடுத்த புகைப்படம் ஒன்றினை சினேகா வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

திரையுலகில் வெகு சில ஜோடிகளே காதல் திருமணம் செய்து கொண்டு பாந்தமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். அப்படி, கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட குடும்பமாக வாழ்ந்து வரும் தம்பதியரில் நடிகை சினேகா, பிரசன்னா ஜோடியும் ஒன்று.

திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை சினேகா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பரபரப்பாக நடித்து வந்த போதே நடிகர் பிரசன்னாவை 2012ல் காதல் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 2015ல் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு விஹான் என்று பெயர் சூட்டினார்கள். இந்நிலையில் இரண்டாவது குழந்தையான பெண் குழந்தை பிறந்திருந்தது.

குழந்தை பிறந்து சில வாரம் கடந்து நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது எடுத்த புகைப்படத்தினை நடிகை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.