யாரும் பீதியடைய வேண்டாம்.. கொரோனா வைரஸ் குறித்து நடிகை சிம்ரன் வெளியிட்ட காணொளி..!

Report
37Shares

கொரோனா வைரஸ் சீனாவில் ஆரம்பித்து தற்போது உலகமெங்கும் பரவி வருகிறது. மேலும் இந்த கொடிய நோய் இந்தியாவில் 110-க்கும் மேற்பட்டோரை தாக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடிகை சிம்ரன் கொரோனா வைரஸ் குறித்து கோரிக்கை விடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், சமீபகாலமாக கொரோனா வைரஸ் குறித்து ஏராளமான தகவல்கள் பரவி வருகிறது. அவை அனைவரையும் பெருமளவில் அச்சுறுத்துகிறது. சிறந்த குடிமகனாக கொரோனா வைரஸை தடுக்க அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

யாரும் பீதியடைய வேண்டாம். வீண் வதந்திகளை பரப்பி பீதியை கிளப்ப வேண்டாம். அனைவரும் அடிக்கடி கைகளை கழுவி, மிகவும் ஆரோக்கியமான சுத்தத்தை கையாளவேண்டும். வெளியே செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும். கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

2075 total views