வீட்டை முழுவதும் பிளாஸ்டிக் பைகளால் மூடிய ஷாருக்கான்... எதற்காக தெரியுமா?

Report
31Shares

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கடந்த 12 ஆம் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை கண்டறிந்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன் பின்னர், சில மணி நேரத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவருக்கும் எடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட பரிசோதனையில் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்து பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனால் இவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் குடும்பத்தினருடன் வசிக்கும் சொகுசு பங்களாவை பாலித்தீன் கவரால் மூடி உள்ளார்.

இந்த பங்களாவில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலர் வசிக்கின்றனர். கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவின.

ஆனால் ஷாருக்கான் கொரோனாவுக்காக இந்த நடவடிக்கை எடுக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

மும்பையில் பெய்யும் அதிகமான மழையிலிருந்தும், பலத்த காற்றிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளவே வீட்டின் வெளிப்புறத்தை பிளாஸ்டிக் கவரால் மூடியிருப்பதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் மழைக் காலங்களில் ஷாருக்கான் இப்படிச் செய்வதை வழக்கமாக வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ஷாருக்கான் தரப்பிலிருந்து எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.