அடடே சூப்பர்ங்க... லாக்டவுன் சமயத்தில் பிக்பாஸ் மதுமிதா என்ன பண்ணியிருக்காங்க தெரியுமா?

Report
59Shares

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகையாக வலம் வருபவர் மதுமிதா.

மதுமிதா என்று சொல்வதை விட ஜாங்கிரி மதுமிதா என்ற பெயரால் பிரபலமானவர்.

ஒரு கல் ஒரு கண்ணாடி, டிமாண்டி காலணி, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜில்லா, காஞ்சனா 2, விஸ்வாசம், காஷ்மோரா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சக போட்டியாளர்களால் துன்புறுத்தப்பட்டதால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.

இதனால் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டதுடன் டிவி நிர்வாகம் சார்பில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் லாக்டவுன் சமயத்தில் இருசக்கர வாகனம் ஓட்டவும், கார் ஓட்டவும் கற்றுக் கொண்டுள்ளாராம் மதுமிதா.

இதுகுறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள மதுமிதா, படப்பிடிப்பு இல்லாத, குறைந்த நாட்களில் பைக் ஓட்டவும் கார் ஓட்டவும் கற்றுக் கொண்டுவிட்டேன்.

எப்போதும் யாரையாவது சார்ந்து நிற்பது பெண்களின் கெட்ட பழக்கம்! நம்மால் இயலும் என்ற நம்பிக்கையோடு பயிற்சி மேற்கொண்டேன். மற்றொரு ஓட்டுநர் இல்லாமல் பயணிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.