நள்ளிரவில் பாரிய சூட்கேஸுடன் சுஷாந்தின் காதலி செய்த செயல்... சூடுபிடிக்கும் சுஷாந்தின் மரணத்தின் மர்மம்!

Report
182Shares

சுஷாந்தின் தந்தை அவரது முன்னாள் காதலி ரியாவின் மீது புகார் அளித்துள்ளதையடுத்து சுஷாந்தின் மரணத்தில் நிகழ்ந்தது என்னவென்று தெரியாமல் அனைவரும் காணப்படுகின்றனர்.

இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்திட பீஹார் தனிப்படை பொலிசார் மும்பை சென்ற நிலையில், ஆனால் ரியா இருக்குமிடத்தை அவர்களால் கண்டறிய முடியவில்லை.

இந்நிலையில் நடிகை ரியா விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என பீஹார் பொலிசார் பேட்டி அளித்துள்ளனர்.

ரியா தான் தங்கியிருந்த வீட்டில் இருந்து இரவோடு இரவாக வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதுகுறித்து ரியா தங்கியிருந்த கட்டிடத்தின் சூப்பர்வைசர் கூறுகையில், ''கடந்த 3 நாட்களுக்கு முன்பாக நள்ளிரவில் ரியா தன்னுடைய சகோதரர் மற்றும் குடும்பத்தினருடன் பெரிய சூட்கேஸ் ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

அவர்கள் ஊதா நிற காரில் சென்றனர்,'' என தெரிவித்து இருக்கிறார். இதனால் ரியா தற்போது எங்கிருக்கிறார் என்பது சஸ்பென்ஸாக உள்ளது.