வேஷ்டியை நான் கேட்டனா? சுரேஷை அடிக்க சென்ற வேல்முருகன்.. பரபரப்பில் போட்டியாளர்கள்

Report
6Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே போட்டியாளர்களை வம்பிழுத்து வருகிறார் சுரேஷ் சக்கரவர்த்தி.

அதில், அனிதா சம்பத் , ரியோ உள்ளிட்டோரை தொடர்ந்து தற்ப்போது வேல்முருகனுக்கும் சுரேஷுக்கு சண்டை வலுத்துள்ளது.

தற்போது வெளியான அந்த ப்ரோமோவில் பிக்பாஸ் வீடே ஒன்று கூடி வேடிக்கை பார்க்கும் அளவிற்கு இருவரும் பக்கத்துக்கு வீட்டுக்காரன் சண்டை போல அடித்துக்கொள்கின்றனர்.

வேல்முருகன் கேட்காமலே வேஷ்டி கொடுத்துவிட்டு பின்னர் அவரை தரக்குறைவாக பேசி அசிங்கப்படுத்தியுள்ளார் சுரேஷ்.

இதனால் அவமானத்திற்கு உள்ளான வேல்முருகன் நான் உங்க கிட்ட கேட்டேன் என நடு வீட்டில் நிக்க வச்சு வெளுத்து வாங்கிவிட்டார்.

ஆனாலும் அதையெல்லாம் அலட்டிக்கொள்ளாத மொட்டை மாமா கூலாக, சாப்பிட்டுக்கொண்டே பரட்டை பத்த வச்சிட்டியே பரட்டை என வசனத்தை பேசுகிறார்.