சதம் அடித்த தவானை கண்டுகொள்ளாமல் கடந்து சென்ற தோனி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Report
36Shares

ஐபிஎல் தொடரின் 34-வது லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆட்டத்தில் அனல் பறக்க விளையாடிய, டூப்ளெசிஸ் மற்றும் சாம் கரன் ஆகிய இருவரும் களத்திற்கு வந்தனர்.

முதல் ஓவரிலேயே துஷார் தேஷ்பாண்டேவின் பவுன்ஸரில் டக் அவுட்டாகி வெளியேறினார் சாம் கரன்.

அதன்பின்னர் டுப்ளெசிஸுடன் வாட்சன் ஜோடி சேர்ந்தார். டுப்ளெசிஸும் வாட்சனும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அருமையாக ஆடினர்.

அடுத்த விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்பதற்காக நிதானமாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்ததால் 9 ஓவரில் சிஎஸ்கே அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு வெறும் 56 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது.

அதன் பின்னர், டுப்ளெசிஸ் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாச, வாட்சனும் அஷ்வின் ஓவரில் பவுண்டரிகளை விளாச, ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

வாட்சன் 28 பந்தில் 36 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த டுப்ளெசிஸ் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின்னர் ஆடிய ஜடேஜா மற்றும் ராயுடு அணியின் ஸ்கோரை நன்கு உயர்த்தினர். 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி.

பின்னர் களமிறங்கிய டெல்லி அணியில், நிலைத்து நின்று ஷிகார் தவான் அதிரடி காட்ட மறுபக்க விக்கெட் விழுந்து கொண்டே இருந்தது.

சிறப்பாகவும் ஆடிய தவான், 19வது ஓவரில் சதமடித்தார். இதுதான் ஐபிஎல்லில் தவானின் முதல் சதம்.

இறுதி ஓவிரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜடேஜா வீச, அனல் பறக்க மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டு வெற்றிக்கு வித்திட்டார் அக்‌ஷார் பட்டேல்.

இந்நிலையில், வெற்றி பெற்று சிஎஸ்கே அணியினர் ஷிகார் தவானை கை கொடுத்து, பாராட்டி வந்தனர். ஆனால் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி மட்டும் கண்டுகொள்ளாததுபோல் கடந்து சென்றார்.

இந்த வீடியோவை இணைய பக்கங்களில் நெட்டிசன்கள் வைரலாக்க, தோனியை கடுமையாக ஒரு பக்கம் விமர்ச்சித்து வருகின்றனர்.