வலிமை படத்தின் புதிய அப்டேட்.. நயன்தாராவையும் விட்டுவைக்காத அஜித் ரசிகர்கள் செய்த செயல்

Report
10Shares

கொரோனா ஊரடங்கால் தியேட்டர்களில் தொடர்ந்து திரைப்படங்களை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ஓடிடியில் சூரைரப்போற்று மற்றும் மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிலையில், தீபாவளி கொண்டாட்டமாக மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வராவிட்டாலும் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று டீசரை படக்குழு வெளியிட்டது.

அதிரடி சரவெடியை வெளியான டீசர் தற்போது 25 மில்லியன் வியூஸ்களைக் கடந்து பல சாதனைகளை முறியடித்து வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

ஆனால், ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரித்து வரும் வலிமை படத்தின் அப்டேட் என்ன என்பது ரசிகர்களுக்கு இன்று வரை மர்மமாகவே உள்ளது.

படத்தை ஆரம்பிக்கும் அறிவிப்பை வெளியிட்டதோடு சரி அப்டேட் தரவே இல்லையே என்பதால் கடுப்பான அஜித் ரசிகர்கள், போனிகபூரை காணவில்லை என போஸ்டர் அடிக்கும் அளவிற்கு கொந்தளித்துவிட்டனர்.

மேலும், தற்போது தீபாவளி விருந்தாக ஓடிடியில் வெளியான நயன்தாராவின் மூக்குத்தி அம்மனையும் தங்களது லிஸ்டில் அஜித் ரசிகர்கள் விட்டு வைக்கவில்லை.

மூக்குத்தி அம்மனிடம் வலிமை அப்டேட் கேளுங்கள் என கூறி ஒரு வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மூக்குத்தி அம்மனின் பவரை யூஸ் பண்ணி வலிமை அப்டேட் வாங்கிக் கொடுப்பதும் கஷ்டம் தான் என்கிறார்கள்.