இந்த சீரியல் நடிகையுடன் காதலில் விழுந்த தொகுப்பாளர்! ஒரே சீரியல் பிரபலங்கள் எடுத்த முடிவு..

Report
218Shares

நடிகர் நடிகைகள் என்றாலே அவர்களுக்கு இடையில் கிசுகிசுகளும் வதந்திகளும் உருவாகிக்கொண்டுதான் இருக்கும். அந்தவகையில் சினிமாவில் ஜோடியாக நடித்து பின் ரியல் ஜோடியாக காதலித்து திருமணமும் செய்து கொள்வார்கள்.

அந்தவகையில், பிரபல தொலைக்காட்சி பிரபலங்கள் புத்தாண்டு அன்று தங்கள் காதலை வெளிப்படுத்தியுள்ளனர். பிரபல தொலைக்காட்சி சீரியலான பூவே பூச்சூடவா பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கதாநாயனாக பல மாற்றினாலும் கதாநாயகி சக்தி ரோலை மாற்றவில்லை.

சக்தி கதாபாத்திரத்தில் நடிகை ரேஷ்மா முரளிதரன் நடித்தும் கதாநாயகனுக்கு தம்பியாக நடிகரும் தொகுப்பாளருமான மதன் பாண்டியன் நடித்து வந்தனர். தற்போது இருவருக்கும் காதல் ஆரம்பித்து புது வாழ்க்கையை திருமணத்தின் மூலம் விரைவில் ஆரம்பிக்க போவதாக இருவரும் அவர்களின் இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளனர்.

இதுபற்றி நடிகர் மதன் கூறுகையில், பொதுவாக அனைவரும் புத்தாண்டிற்கு ஏதாவது தீர்மானம் எடுப்பார்கள். அந்த வகையில் நானும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை சொல்லி என்னுடைய ரசிகர்களுக்கும் ரேஷ்மாவின் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று நினைத்தேன்.

மேலும், அதனால் தான் கொஞ்சம் காத்திருந்து சரியாக புத்தாண்டு பிறந்த அந்த நிமிடத்தில் எங்கள் கல்யாண செய்தியை அறிவித்தோம். ஆம் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

இதுபற்றி நடிகை ரேஷ்மா கூறும்போது, ஆம் என்னுடைய கடைசி பெயரை மாற்ற போகிறேன்” என்று மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.