இந்த சின்ன வயதில் இம்புட்டு பெரிய மூளையா! சிறுவனால் திணறிப்போன பிரம்மாண்ட நிறுவனம்

Report

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவன் அலெக்ஸ் ஜாக்குவாட். இந்த சிறுவனுக்கு 10 வயது மட்டும் தான் ஆகிறது. அந்நாட்டின் குவாண்டஸ் விமான நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளான்.

இதில் புதிய விமான நிறுவனம் தொடங்க என்ன செய்ய வேண்டும் என ஆலோசனைக் கேட்டுள்ளான். பள்ளி விடுமுறை நாட்களில் தனது சொந்த விமான நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் எனவும் விமான நிறுவன செயல்பாடுகள் குறித்த சந்தேகங்களையும் கேட்டுள்ளான்.

இதற்கு பதிலளித்துள்ள குவாண்டஸ் விமான நிறுவனம், போட்டியாளர்கள் எங்களிடம் ஆலோசனை கேட்பது இல்லை என வேடிக்கையாக கூறியதோடு, ஒரு தலைமை செயல் அதிகாரி, மற்றொரு நிறுவன தலைமைச் செயல் அதிகாரியுடன் ஆலோசனை செய்கிறது எனவும் குறிப்பிட்டதோடு, நேரில் வருமாறும் சிறுவனுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

2388 total views