மர்ம நபர்களால் காரில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்- அநியாயமாக ஒரு உயிர் போனது, அடித்துக்கொள்ளும் பெற்றோர்

Report
99Shares

நாகை மாவட்டத்தில் தரங்கம்பாடியை சேர்ந்த அபிநயா, கேசவன், கவியரசி ஆகியோர் பொள்ளாச்சியில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்தனர்.

ஊருக்கு வந்திருந்த அவர்கள் விடுமுறை முடிந்து மீண்டும் பொள்ளாச்சி செல்வதற்கு கடந்த 6ம் தேதி தரங்கம்பாடி பேருந்து நிலையம் வந்துள்ளனர்.

அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அபிநயா மற்றும் கவியரசியை இழுத்து காரில் தள்ளியுள்ளனர். இதில் கவியரசியின் உடை காரில் மாட்டிக் கொண்டதால் அவர் சாலையில் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதைப் பார்த்த பொதுமக்கள் சத்தமிட காரில் இருந்த கவியரசியை தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர்.

பின் கவியரசி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் கடந்த சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார், அந்த பெண் சாலை விபத்தில் உயிரிழந்ததாக போலீசார் பதிவு செய்ய கவியரசியின் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்ய போலீஸ் நிலையத்தை முற்றுமையிட்டுள்ளனர்.

தற்போது போலீசார் இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

4255 total views