சுருங்கி வரும் நிலவு... நாசா அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சிகர தகவல்

Report
16Shares

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான, 'நாசா'வின் சார்பில் அனுப்பப்பட்டுள்ள, எல்.ஆர்.ஓ., எனப்படும், நிலவை சுற்றி வரும் விண்கலம், புகைப்படங்களை அனுப்பி வருகிறது.

நிலவின், வட முனைக்கு அருகில் உள்ள பகுதியில் எடுக்கப் பட்ட, 12 ஆயிரம் புகைப்படங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதன்படி, நிலவில், 450 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த வெப்பத்தின் அளவு குறைந்து வருகிறது.பூமிக்கு அடியில் உள்ளது போன்ற, பல்வேறு நிலப்படிவுகள் நிலவில் கிடையாது. மேலும், அதன் மேற்பகுதி, மாற்றத்துக்கு உட்படக் கூடியது. வெப்பநிலை குறைந்து வருவதால், பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட, 150 அடி, நிலவு சுருங்கி உள்ளது.

இவ்வாறு சுருங்கும்போது, நிலவில் வெடிப்புகளும், சுருக்கங்களும் ஏற்பட்டுள்ளன. மேலும், பூமியில் ஏற்படும் நில நடுக்கம் போல, நிலவிலும் நடுக்கம் ஏற்பட்டுஉள்ளது.உதாரணத்துக்கு, திராட்சை பழத்தை காய வைத்தால், அதில் உள்ள ஈரத்தன்மை குறைந்து, தோல் சுருங்கி, உலர் திராட்சை ஆவதுபோல், நிலவின் மேற்பகுதியில் சுருக்கங்கள் ஏற்பட்டு உள்ளன.

அமெரிக்காவில், அறிவியல் ஆய்வு பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.'ஆர்திமிஸ்' பெயர் சூட்டல்'நாசா' சார்பில், 2024ம் ஆண்டில், நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. முதல் முறையாக பெண்ணை அனுப்பவும், நாசா முடிவு செய்துள்ளது.இந்நிலையில், இந்த திட்டத்துக்கு, 'ஆர்திமிஸ்' என, பெயரிடப்பட்டுள்ளது. கிரேக்கர்களின் புராணத்தின்படி, நிலவுக்கான பெண் கடவுளான, ஆர்திமிஸ் பெயர், புதிய திட்டத்துக்கு வைக்கப்பட்டுள்ளது.

1064 total views