பிறந்த குழந்தையை அடித்து கொலை செய்த கும்பல்! பரிதாப மரணம் சம்பவம் - வீடு புகுந்து வெறிச்செயல்

Report
81Shares

குழந்தைகள் என்றாலே எல்லோருக்கும் கொஞ்ச வேண்டும் என்ற ஆசை தான் இருக்கும். ஆனால் குஜராத்தின் அகமதாபாத்தில் பிறந்து 20 நாட்களே ஆன குழந்தையை அடித்து கொலை செய்தது பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

அங்கு பெண் ஒருவர் தன் குழந்தையுடன் வீட்டில் தனியே இருந்துள்ளார். அப்போது 5 பேர் கொண்ட ரவுடி கும்பல் திடீரென வீட்டிற்குள் நுழைந்து தாய் மற்றும் குழந்தையை தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனால் தாய் அளித்த புகாரின் பேரில் அந்த ரவுடி கும்பலை சேர்ந்த 3 பேரை போலிசார் கைது செய்துள்ளனர். இன்னும் 2 பேரை தேடி வருகின்றனர்.

கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லையாம்.