75 அடி நீள ரயில்வே பாலத்தை இருந்த சுவடே இல்லாமல் மொத்தமாக திருடி சென்ற பலே திருடர்கள்..!

Report
32Shares

வடிவேலு ஒரு படத்தில் கிணத்தைக் காணோம் என புகார் செய்வார் அல்லவா, அதுபோல ரஷ்யாவில் தற்போது மிகப்பெரிய பாலம் ஒன்றைக் காணவில்லை என்ற வினோதமான புகார் ஒன்று விசாரணைக்காக வந்துள்ளது.

அதாவது ரஷ்யாவின் முர்மன்ச்க் பகுதியில் உம்பா என்ற நதியின் மேல் ரயில்வே பாலம் ஒன்று இருந்து வந்தது. கடந்த 2007ம் ஆண்டு முதல் இந்தப் பாலம் பயன்பாட்டில் இல்லை. அடர்ந்த வனப்பகுதி என்பதால் மக்கள் நடமாட்டமும் அப்பகுதியில் அதிகம் இருப்பதில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் அந்த பாலம் மாயமாகி விட்டதாக சமூகவலைதளங்களில் ஒரு புகைப்படம் பரவியது. அதில் அங்கு ஒரு பாலம் இருந்ததற்கான சுவடே இல்லாமல் இருந்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ஆரம்பத்தில் இது போட்டோஷாப் வேலையாக இருக்கக்கூடும் என மக்கள் கருதினர். ஆனால் விசாரணையில் நிஜமாகவே அங்கிருந்த பாலம் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு வேலை பாலம் உடைந்து கீழே விழுந்திருந்தால், அதன் இடிபாடுகள் அப்பகுதியில் கிடந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் அப்பகுதியில் கிடைக்கவில்லை. இதனால், அப்பாலம் திருடர்களால் திருடப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு போலீசார் குற்றவழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.