ஓட ஓட விரட்டி வெட்டி கொலை! காவல் நிலையம் முன்பே நடந்த கொடூர சம்பவம் - சிக்கிய சிசிடிவி காட்சி

Report
34Shares

சட்டங்கள் பல இருந்தும் சமூகத்தில் சட்டத்திற்கு விரோதமான அசம்பாவிதங்களும் நடைபெற தான் செய்கின்றன. கண் முன்பே பல கொடுமைகள் நடந்தாலும் ஏன் என்று கேட்க நாதி இல்லை.

இந்நிலையில் மதுரையில் பட்ட பகலில் காவல் நிலையில் எதிரே நடந்த கொலை சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 12 ம் தேதி தல்லாகுளம் காவல் கையெழுத்திட வந்த அஜித் மற்றும் அவரது அண்ணன் ரஞ்சித் ஆகிய இருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டியது.

தடுமாறி கிழே விழந்த அஜித் என்ற இளைஞரை சரமாறியாக வெட்டி சம்பவ இடத்திலேயே கொலை செய்துள்ளனர். மேலும் அவரின் அண்ணன் படுகாயங்களுடன் தப்பியுள்ளார்.

தற்போது இந்த சம்பவத்தில் தொடர்புடைய அஜித்தின் நண்பர்கள் இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

1955 total views