
உலகில் படைக்கப்பட்ட உயிரினங்களும் இயற்கையின் அதிசயம் தான். இதில் சில உயிரினங்கள் மனிதனால் அழிவை சந்தித்து வருகின்றன. இந்த லிஸ்டில் யானைகளும் இருக்கின்றன. தென்னாப்பிரிக்காவில் இருக்கும் சிறிய நாடுகளில் ஒன்று போட்சுவானா.
இங்கு கேப்டவுணை சேர்ந்த ஜஸ்டின் சுலிவென் என்ற ஆவணப்பட இயக்குனர் யானைகள் தந்தத்திற்காக கடத்தப்படுவது குறித்து படம் எடுத்துள்ளார். இதற்காக அவர் ஆள்நடமாட்டம் இல்லாத பக்தியில் ட்ரோன் கேமிராவை பறக்கவிட்டுள்ளார்.
அதில் சிக்கிய முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்த யானையின் புகைப்படம் உலகையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
யானை ஒன்று தந்தத்திற்கு துதிக்கை அறுக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது. நன்கு வளர்ந்த அந்த யானை தந்தம் கிடைக்காததால் 20 நிமிடங்கள் ரம்பம் மூலம் துதிக்கையை அறுத்துள்ளனர்.
2014 முதல் 2018 வரையிலான காலங்களில் 598 சதவீதம் யானைகளின் தந்தம் திருடப்பட்டு கள்ளச்சந்தையில் விற்கப்பட்டுள்ளன. இதில் நாள் ஒன்று சுமார் 100 யானைகளின் தந்தங்கள் அறுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
போட்சுவானா பகுதியில் அண்மையில் தான் வேட்டை தடை சட்டம் நீக்கப்பட்டதாம். அதன் பின்னர் தான் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Andrei Stenin International Press Photo போட்டியில் இந்த யானையின் புகைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.