அத்தி வரதரை பார்க்க வந்த பெண்ணுக்கு நடந்த அதிசயம்! யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம் - கொண்டாட்டத்தில் பொது மக்கள்

Report
304Shares

எந்த வருடமும் இல்லாதளவுக்கு இந்த வருடம் தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் கவனமும் காஞ்சிபுரம் அத்திவரதர் மீது சென்றது. இந்த தெய்வ பணிக்கு முக்கிய காரணம் ஊடகம் எனலாம்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்குளத்திலிருந்து வெளியே வந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் புரியும் வைபவம் அண்மையில் தொடங்கியது.

மிகுந்த கூட்ட நெரிசல் இருந்தாலும் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து சுவாமியை காண திரளாக வருகை தந்தனர்.

இந்த நிகழ்வு முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் வேலூர் மாவட்டம் பாணவரத்திலிருந்து கர்ப்பிணி பெண் விஜயா இன்று காலை அத்தி வரதரை தரிசனம் செய்ய வந்துள்ளார்.

தரிசனம் முடிந்த பின் வெளியே வந்த அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட உடனே கோவில் வளாகத்திலிருந்த மருத்துவ முகாமிற்கு அப்பெண்ணை அருகில் இருந்தவர்கள் அழைத்து சென்றுள்ளனர்.

உடனே மருத்துவர்கள் வரவழைக்கபட்டு அப்பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. விஜயாவுக்கு நல்ல ஆரோக்கியத்துடன் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதனால் விஜயாவும் அப்பகுதி மக்களும் அதிசயத்துடன் இந்த நிகழ்வை கண்டு மகிழ்ந்துள்ளனர்.

12622 total views